ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் இன்று(வியாழக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அது தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழுத்தம் பிரயோகித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here