பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் இன்னும் ஆரம்ப கட்ட பணிகளிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காலாவதியான சட்டங்களை எவ்வாறு புதுப்பித்தல் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப எப்படி சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டம் அதிகாரிகளினால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து சர்வதேச நாடுகள் உட்பட பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு அமைச்சர் பந்துல குணவர்தனவின் அண்மைய கருத்து பெரும் பிரச்சினையை தோற்றுவித்த நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்து அரசாங்கம் பேசிவருகின்றது.

புதிய சட்டம் மிக ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் மற்ற நாடுகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து பல ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2016 மற்றும் 2019 க்கு இடையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற மற்றுமொரு சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்ட போதும் 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பணிகள் தொடரப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here