புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் ஒரு தொகை தனி நபர்கள் மீதான தடைகளை அரசாங்கம் நீக்கி இருக்கிறது. இந்த தடை நீக்கம் ரணில் விக்ரமசிங்கவின் முடிவு அல்ல. ஏற்கனவே கோதாபய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒன்று. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க இப்பொழுது சில அமைப்புகளையும் நபர்களையும் தடை நீக்கி இருக்கிறார்.

இது தொடர்பாக நான் எழுதிய ஒரு கட்டுரை குறித்து கனடாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் என்னிடம் பின்வருமாறு கேட்டிருந்தார்… ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் ஓரணியாக அல்லது நிறுவனமயப்பட்டு நாட்டுக்குள் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்.. ஆனால் நாட்டில் இருக்கும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளை ஒற்றுமைப்படுத்த முடியாத நாங்கள் எப்படி உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளை பேசிக்கொண்டுஇ வெவ்வேறு நிலையான நலன்களோடுஇ நிகழ்ச்சி நிழல்களோடு சிதறிக் காணப்படும் தமிழ் டயஸ்போறா அமைப்புகளை எப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம்?’ என்று. நியாயமான கேள்வி. தாயகத்தில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முடியாத தமிழர்கள் உலகமெங்கும் சிதறி வாழும் டயஸ்போறா தமிழ் அமைப்புகளையும் செயற்பாட்டாளர்களையும் ஒன்றாக்குவது என்பது அம்புலிமாமாக் கதை தான்.ஆனால் அவ்வாறு ஒன்றாகவில்லை என்றால் என்ன நடக்கும் ? ரணில் விக்கிரமசிங்க இந்த அமைப்புக்களையும் நபர்களையும் பிரித்துக் கையாள்வார்.ஏற்கனவே நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ரணில் மைத்திரி ஆட்சி காலத்தில் அது நடந்தது.

தடை நீக்கம் என்பது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளை பொறுத்தவரை அவற்றின் தீவிரத்தை குறைக்கக் கூடியது. நாட்டுக்குள் வந்து போகலாம் என்ற நிலைமை தோன்றியதும் அமைப்புகளும் தனி நபர்களும் அந்த நிலைமையை எப்படித் தொடர்ந்து பாதுகாக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கும். அவ்வாறு சிந்தித்தால் நாட்டுக்கு எதிராக ஜெனிவாவில் அல்லது வேறு மனித உரிமை அரங்குகளில் அவர்களுடைய செயற்பாடுகளின் வேகம் குறைந்து விடும்.
கடந்த ஆண்டு ஜெனிவா கூட்டத் தொடரின் போது இது தொடர்பான ஒரு அவதானிப்பு உண்டு. பொதுவாக ஜெனிவா கூட்டத் தொடர்களில் பக்க நிகழ்வுகளுக்கு டயஸ்போறா தமிழ் அமைப்புகள் நிதி உதவி புரிவது உண்டு. எனினும் கடந்த ஆண்டு ஒப்பீட்டளவில் குறைந்தளவு பக்க நிகழ்வுகளே இடம்பெற்றதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார். அதற்குக் காரணம் பக்க நிகழ்வுகளுக்கு நிதி உதவி புரியும் தமிழ் முதலீட்டாளர்கள் சிலர் தமது நிதி உதவிகளை குறைத்தமைதான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மேற்படி தமிழ் முதலாளிகள் தாயகத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதனால்இ அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதினால்இ அவ்வாறு நாட்டுக்கு எதிரான பக்க நிகழ்வுகளில் முதலீடு செய்வதை குறைத்து வருவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.அதாவது டயஸ்போறா தமிழ் அமைப்புகளை நாட்டுக்குள் முதலீடு செய்ய விட்டால் அவர்கள் நாட்டுக்கு வெளியே நாட்டுக்கு எதிராக செயல்படும் தீவிரம் குறைந்துவிடும் என்று ரணில் விக்கிரமசிங்க சிந்திக்கின்றார்.

இதை எதிர்பார்த்துத்தான் ரணில் விக்கிரமசிங்க 2015இல் ஆட்சிக்கு வந்த பின் சில டயஸ்போறா அமைப்புகளையும் நபர்களையும் தடை நீக்கினார். அண்மையில் நடந்த தடை நீக்கமும் அந்த உள்நோக்கத்தை கொண்டதுதான். அது முதலீட்டு நோக்கங்களை கொண்டது என்று பொதுவாக நோக்கப்படுகிறது. நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியின் அடிப்படையில் புலம்பெயர் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் அவ்வாறு தடை நீக்கியதாக கருதப்படுகிறது. இருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தடை நீக்க நடவடிக்கை எனப்படுவது தனிய முதலீட்டு நோக்கங்களை மட்டும் கொண்டதாக இருக்காது. அதைவிட ஆழமான பொருளில்இ ஜெனிவாவை எதிர்கொள்ளல்இஅனைத்துலக சமூகத்தை எதிர்கொள்ளல்இ தமிழ் டயஸ்போறாவை பலவீனப்படுத்துதல் போன்ற நீண்ட கால உள்நோக்கங்களை கொண்டதாகவே இருக்க முடியும்.

தமிழ் டயஸ்போறா அமைப்புகளை நாட்டின் கள யதார்த்தத்தோடு தொடர்பு கொள்ள வைத்தால் அவற்றின் தீவிரம் குறைந்து விடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. நாட்டுக்கு வந்து போகக் கூடிய வாய்ப்புகளை பாதுகாப்பதற்காக தடை நீக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுவதை குறைத்துக் கொள்வார்கள் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இது 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் அவதானிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானமானது இலங்கை தீவில் நிலைமாறு கால நீதிக்குரிய செயல்பாடுகளை முன்மொழிந்தது. அத்தீர்மானத்தை எல்லா டயஸ்போறா அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது விடயத்தில் டயஸ்போறா அமைப்புகள் இரண்டாகப் பிரிந்து நின்றன.ஒரு பகுதி டயஸ்போறா அமைப்புகள் -குறிப்பாக தடை நீக்கப்பட்டவை- நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டன. அந்நீதியை வலியுறுத்திய ஐநா தீர்மானத்தை முன்மொழிந்த மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரல் களுக்கு சாதகமாக பதில் வினையாற்றின.

அக்காலகட்டத்தில் கூட்டமைப்பு நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் திரைமறைவு பங்காளியாக செயல்பட்டது.எனவே கூட்டமைப்பும் நிலை மாறு கால நீதியை ஆதரித்தது. இதனால் தாயகத்திலும் டயஸ்போறாவிலும் நிலைமாறுகால நீதி செய்முறைகளுக்கு ஆதரவாக ஓர் அணித் திரட்சி ஏற்பட்டது.

ஆனால் எல்லா தமிழ் டயஸ்போறா அமைப்புகளும் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு ஒரு தொகுதி அமைப்புகளும் தனி நபர்களும் பரிகார நீதியை கேட்டனர். இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான் இனப் பிரச்சினைக்குரிய இறுதி தீர்வாகவும் அமைய வேண்டும் என்று அவை வற்புறுத்தின. அதாவது இனப் பிரச்சினைக்கு பரிகாரமாக அமையும் நீதி என்ற அடிப்படையில் அதனை பரிகார நீதி என்று அவை அழைத்தன.

எனினும்இ நிலைமாற கால நீதியை அதன் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்தார்.நிலை மாறுகால நீதி என்பது இலங்கை தீவை பொறுத்தவரையிலும் ஓர் அழகிய பொய்யாக மாறியது. ரணில் மைத்திரி ஆட்சி காலத்தில் நிலைமாறு கால நீதியை வலியுறுத்திய கூட்டமைப்பு பின்னர் அது ஒரு தோற்றுப் போன பரிசோதனை என்று வர்ணித்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐநா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்த பொழுது நடந்த ஒரு சந்திப்பில் சுமந்திரன் வவுனியாவில் வைத்து அதை தெரிவித்தார். ஒரு பரிசோதனை செய்தோம் அது தோற்றுப் போய்விட்டது என்றும் அவர் சொன்னார். இவ்வாறு நிலைமாறு கால நீதி என்ற பரிசோதனை இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் தோல்வியுற்ற ஒன்றாகவும்இராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சியை உற்பத்தி செய்த ஒன்றாகவும் முடிவடைந்தது.

எனினும் ராஜபக்சக்கள் அவர்களுடைய இரண்டாவது ஆட்சி காலத்தின் போது ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க நிலைமாறுகால நீதியின் கீழ் உருவாக்கிய கட்டமைப்புகளை தொடர்ந்து அவற்றின் பலவீனமான நிலையில் பாதுகாத்தார்கள்.அவற்றுக்குரிய ஆலணிகள்இவளங்கள்இ வாகனங்கள் குறைக்கப்பட்டன. நிதி வெட்டப்பட்டது. அவற்றுக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற படைப் பிரதானிகள் நியமிக்கப்பட்டார்கள். எனினும் அந்த கட்டமைப்புகள் தொடர்ந்து இயங்குவதாக ஐநாவிற்கு காட்ட வேண்டிய ஒரு தேவை அவர்களுக்கு இருந்தது. காணாமல் போனோருக்கான அலுவலகம்இ இழப்பீட்டு நிதிக்கான அலுவலகம்இ சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான அலுவலகம் போன்றன இப்பொழுதும் தொடர்ந்து இயங்குகின்றன. கடந்த ராஜபக்சகளின் பட்ஜெட்டின் போது இழப்பீடு நீதிக்கான அலுவலகத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு தொகை ஒதுக்கப்பட்டது.
இவற்றின்மூலம் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் அரசாங்கம் தொடர்ந்தும் உண்மையாக இருக்கிறது என்று காட்டுவதே ராஜபக்சக்களின் உள்நோக்கமாக இருந்தது. இப்பொழுது ரணில் வந்து விட்டார். அவர் நிலைமாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவர். வரும் மாதம் தொடங்கவிருக்கும் ஐநா கூட்ட தொடரில் அவர் எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பார்?

தமிழ் டயஸ்போறா அமைப்புகளை தடை நீக்கியதன் மூலம் அவர் ஜெனிவாவை வெற்றிகரமாக கையாளத் தொடங்கிவிட்டார். எனினும் கடந்த முறையைப் போல இம்முறையும் நிலைமாறு கால நீதியா பரிகார நீதியா என்ற விவாதத்தில் டயஸ்போறா அமைப்புகள் இரண்டாக பிரிவுபடும் நிலைமை குறைவாக இருக்கும் என்று தோன்றுகிறது.ஏனெனில் கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக்காலத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளிகளில் ஒருவராக காணப்பட்ட கூட்டமைப்பு இப்பொழுது ரணிலுக்கு எதிராகத் திரும்பி விட்டது.

எனவே இம்முறையும் நிலைமாறு கால நீதிக்குரிய நிகழ்ச்சிகளை கூட்டமைப்போடு சேர்ந்து முன்னெடுப்பது கடினம். ஆனால் அதே சமயம் ரணில் விக்கிரமசிங்கவால் தடை நீக்கப்பட்ட அமைப்புகளோடு கூட்டமைப்பு கடந்த சில வாரங்களாக நெருங்கி இடையூடாடி வருகிறது என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் ராஜபக்சேக்களின் இரண்டாவது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களின் பிரகாரம் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டி இருக்கும். குறிப்பாக சாட்சிகளையும் சான்றுகளையும் திரட்டுவதற்கான பொறிமுறையை ரணில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இதுவரையிலுமான நிலைமைகளின்படி இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரை எதிர்கொள்வது பொறுத்து ரணில் விக்கிரமசிங்க அதிகம் யோசிப்பதாக தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை ஜெனிவா என்பது விளையாட இலகுவான ஒரு களம். அவர் நிலைமாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவர். நாட்டில் இப்பொழுதும் பலவீனமான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலை மாறுகால நீதி கட்டமைப்புகளை அவர் ஒப்பிட்டளவில் வினைத்திறனோடு இயங்க வைக்க முடியும்.

இம்முறை ஜெனிவாவை பொறுத்தவரை அவருக்கு சவாலாக இருக்கக்கூடியவை முக்கியமாக இரண்டு விடையங்கள்.முதலாவது அரகலயவை அவர் கையாளும் விதம்.இரண்டாவது ஏற்கனவே ராஜபக்சக்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சான்றுகளையும் சாட்சிகளையும் திரட்டுவதற்கான பொறி முறை.

இந்த இரண்டு விடயங்களையும் அவர் ஒரு கல்லை வைத்து அடிப்பார். அதுதான் பொருளாதார நெருக்கடி. பெரும்பாலும் ஐநாவும் மேற்கு நாடுகளும் அவரை கைவிடும் நிலைமை இல்லை. கடந்த 17 ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதன் மூலம்தான் இலங்கை தீவில் மேற்கு நாடுகள் தமது நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்லலாம் என்ற நிலைமை காணப்பட்டு வருகிறது.எனவே தேர்தல் இன்றிஇ சதி சூழ்ச்சிகள் இன்றி இஎதிர்பாராமல் கிடைத்த ஒரு ஆட்சி மாற்றத்தை பலப்படுத்த வேண்டும் என்றுதான் மேற்கு நாடுகளும் ஐநாவும் சிந்திக்கும். இது ஜெனிவாவில் ரணிலுக்கு சாதகமானது.

ஐநாவில் அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமை காணப்படுகிறது என்றால் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மக்களுக்கு பாதகமானது என்று பொருள்.ஒரு தொகுதி டயஸ்போறா அமைப்புகளும் நபர்களும் தடை நீக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் ரணில் விக்ரமசிங்க தமிழ் டயஸ்போறாவை வெற்றிகரமாக பிரித்து கையாள்வாராக இருந்தால்இ ஐநா அரங்கில் தமிழ் மக்களின் நிலை மேலும் பலவீனமடையும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here