கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் 24 ஆம் திகதியன்று இலங்கைக்கு திரும்பவிருந்தபோதும், அது மேலும் இரண்டு வாரங்களுக்கு தாமதமாகும் என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் கோட்டாபயவுக்கு தாய்லாந்தில் தங்கியிருப்பதில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினால் அவர் நாடு திரும்புவதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் நாடு திரும்பக்கூடும் என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி! நாடு திரும்பலாமென தகவல் | Gotabaya Rajapaksa S Financial Crisisகோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து கேள்வி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த ஜூலை மாதம் மக்கள் இலங்கையில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்சென்று பின்னர் சிங்கப்பூரில் தங்கியிருந்த அவர் தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையிலேயே கோட்டாபய நாளை புதன்கிழமை திரும்பி வரலாம் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி! நாடு திரும்பலாமென தகவல் | Gotabaya Rajapaksa S Financial Crisis

எனினும் ஆனால் அவரது பாதுகாப்பு குறித்து ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் வருகை ஒத்திவைக்கப்பட்டது.

கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள செலவு

இதேவேளை தனிப்பட்ட ஜெட் விமானம், மற்றும் பாதுகாப்பு உட்பட்ட வகையில் கோட்டாபயவுக்கு இதுவரை பல நுாறு மில்லியன் ரூபாய்கள் செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அதிக செலவும் அவர் இலங்கைக்கு திரும்ப காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செலவுகளை அவரால் நன்மைப் பெற்ற அவரின் நட்பு தரப்புக்களும் ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here