வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

அதற்கமைய ஹம்பாந்தோட்டையில் 24 வீடமைப்புத் திட்டங்களும் மாத்தறையில் ஒன்றும் மேற்கொள்ளப்படுகின்றதோடு அம்பாந்தோட்டையில் மேலும் 26 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தெற்கில் நிர்மாணிக்கப்படவுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1200 ஆகும்.

இந்தத் திட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து 600 மில்லியன் ரூபாய் பெறப்பட உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 24 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here