முழுநேர போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தீர்மானித்துள்ளார் .

இதேவேளை  முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் 40 ஆயிரம் மெட்றிக் டொன் அடங்கிய மசகு எண்ணெய் கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதோடு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 19 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here