சீனாவுடனான நட்புறவை உறுதியாக வைத்துக்கொள்ள விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் இடம்பெற்ற  சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான இரு தரப்பு சந்திப்பின் போதே இதனை தெரிவித்திருந்தார்.

சீனாவின் இராணுவக் கப்பலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஒரே சீனா கொள்கைக்கான இலங்கையின் உறுதியான ஒத்துழைப்பை அமைச்சர் சப்ரி வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here