அரச வங்கி ஒன்றில் இருந்து 6 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்ய உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்கிய பெண்ணொருவரை குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது.

48  கடன் கோப்புகள் மூலம் மோசடி செய்யப்பட்ட பணம்

அரச வங்கியில் பல மில்லியன் ரூபா மோசடி:5 வருடங்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ள பெண் | Fraud Several Millions Of Rupees State Bank

இந்த பெண் கொழும்பு கோட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அரச வங்கி ஒன்றின் கணக்காய்வு அதிகாரி, கடவத்தையில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து, வேறு ஒரு நபரை போல் காட்டி 48 தனிப்பட்ட கடன் கோப்புகள் மூலம் 6 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த குற்றவியல் விசாரணை திணைக்களம் இந்த பெண்ணை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண் 62 வயதான கடவத்தை இஹல பியன்வல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சந்தேக நபரான வங்கி ஊழியர் உயிரிழப்பு

அரச வங்கியில் பல மில்லியன் ரூபா மோசடி:5 வருடங்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ள பெண் | Fraud Several Millions Of Rupees State Bank

இந்த விசாரணைகளின் அடிப்படையில் நிதி மோசடியை மேற்கொள்ள முதன்மையாக இருந்து செயற்பட்ட குறித்த வங்கியின் கடமையாற்றிய பிரதான சந்தேக நபரான பெண் உயிரிழந்துள்ளார்.

நிதி மோசடிக்கு உதவி மற்றும் ஒத்துழைப்புகள் வழங்கியமை தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண், வங்கி கடன் துறையில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற உதவி பொது முகாமையாளர் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here