அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் பாடசாலைகள் இயங்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
இதற்கு முன்னர் பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் எனவும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை பாடசாலைகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
வடக்கில் 5 நாட்களும் பாடசாலைகள் இயங்கும்
இதனிடையே நாளை 8 ஆம் திகதி முதல் வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் வாரத்தில் 5 நாட்களும் நடத்துமாறு வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.