நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு முழுநேர நிதி அமைச்சர் தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சை வேறொரு அமைச்சருக்கு வழங்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிதியமைச்சர்

நிதியமைச்சை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை | Will Imf Support Sri Lanka

ஜனாதிபதியின் கீழ் நிதி அமைச்சு இருப்பது தற்போது சரியான தீர்வல்ல. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலை விரைவாக முடிக்க வேண்டும்.

உலக வங்கி விடுத்துள்ள அரசியல் திருத்தம் உள்ளிட்ட நிபந்தனைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது தற்போதைய நிலையில் கட்டாயமாகும்.

சர்வதேச உதவிகள்

நிதியமைச்சை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை | Will Imf Support Sri Lanka

தற்போதுள்ள அரசாங்கமோ அல்லது புதிய அரசாங்கமோ இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க முடியாது.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் பொருளாதார நெருக்கடியை இரண்டு வருடங்களுக்குள் திட்டமிட்டுத் தீர்க்க முடியும் என சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here