முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியவுடன், மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்குத் திரும்புவார் என நம்பப்படுகிறது.

நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதா, இல்லையா என்பது குறித்து அவரது நெருங்கிய உறவினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்புவதற்கான சரியான நேரம் இதுவல்ல என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here