முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்குள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபயவின் இலங்கை விஜயம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீசா காலம் எதிர்வரும் 11ம் திகதியுடன் முடிவடைகின்றது. தனது மனைவியுடன் அமெரிக்கா செல்வதற்கு விடுத்த கோரிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நிராகரித்துள்ளது என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவது குறித்து அரசாங்கம் இதுவரையில் எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here