சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே அவர்களுடனான பேச்சு முன்னேற்றம் அடைய, கடன் நிலைத்தன்மை குறித்த முறையான திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட மாட்டோம் என்ற கடந்த அரசாங்கத்தின் விடாப்பிடியே பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் ஸ்தம்பிதமடைய காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முழுமையான அரசியல் ஸ்திரத்தன்மையுடன் கூடிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளையில் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.