தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களையும் பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here