ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சிய விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here