கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பழக்க வழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில் நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ உதவிகள் தொடர்பிலான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி  இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நேற்று(செவ்வாய்கிழமை) 119 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததுடன், கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சில மாதங்களுக்குப் பிறகு கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் மக்களிடம் கோரியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here