பத்தரமுல்ல – பொல்துவ சந்திக்கு அருகில் நேற்றிரவு (புதன்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ சிப்பாய் ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு இராணுவ சிப்பாய் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவரது T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here