நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung) தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அனைத்து தரப்பினரும் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக நிர்வாகம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கைகளை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் மூலம் மாத்திரமே அடைய முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here