ஆயுதம் தாங்கிய படையினருக்கு இலங்கையின் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி ஊரடங்கு சட்டமும், அவசர காலச் சட்டமும் நடைமுறையிலுள்ள தற்போதைய சந்தர்ப்பத்தில் நிலைமைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு ஆயுதம் தாங்கிய படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் நாட்டில் அமைதியை பேணுமாறு பொதுமக்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

புதிய ஜனாதிபதி நியமனம்

இதேவேளை ஜனாதிபதி இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இணங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here