மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் முற்றுகை

இதேவேளை கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களின் முற்றுகைக்குள் வந்துள்ளது.

அப்பகுதியில் பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளதுடன், பெருமளவு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here