இலங்கையில் அரசியல் ஸ்திரம், ஒத்துழைப்பு மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றம் ஆகியவை அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் மத்தியில் கடந்த 9ஆம் திகதி இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அதேநேரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சர்வகட்சி அரசாங்கத்துக்கு இடமளிக்கும் வகையில் தாம் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்
போராட்டம்
இதனையடுத்து பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை குறைந்தது 30 நாட்களுக்கு நியமிக்க கட்சித் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் அமைதியையும் ஸ்திரத்தையும் விரைவான அரசியல் நடவடிக்கைகளையும் கோரியிருக்கிறது. இலங்கை மக்களை பொறுத்தவரையில் அவர்கள் அமைதியான முறையில் தமது குரல்களை எழுப்புவதற்கு உரிமை இருக்கிறது.
எனினும் ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் பிரஸல்ஸ் நகரில் தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
இதேவேளை இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையின் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கு அனைத்து கட்சிகளும் வழிவிட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.