அனைத்துக் கட்சி அரசாங்கம் அல்லது உருவாகும் புதிய அரசாங்கம் கடுமையான நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் அமைந்தவுடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

பொருளாதார நெருக்கடி தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என பல அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக பொருளாதார பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க, கடுமையான பொருளாதார சீர்திருத்தங்கள் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாதென சுட்டிக்காட்டியுள்ளார்.

பிழையான தீர்மானம், ஊழல் மோசடி போன்ற கொள்கைளினாலேயே நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் அல்லது எந்த அரசாங்கம் அமைந்தாலும் நிதி நெருக்கடியை தீர்க்க முடியாது.

பொருளாதார சீர்திருத்தங்கள்

இலங்கையில் அடுத்து என்ன...! பொருளாதார நெருக்கடி தீர்ந்து விடுமா...... | Will There Be A Solution To Sri Lankas Problem

உரிய சீர்த்திருங்கள் மேற்கொள்ள வேண்டும். பொருளாதார சீர்திருத்தங்கள் பாரிய அளவில் முன்னெடுத்து, அதனை கடுமையாக மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் உதவினாலும் உடனடியாக இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்துவிட முடியாது.

system change எனப்படும் சீர்த்திருங்கள் செய்து அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் தற்காலிகமாக இந்த பிரச்சினைகளை பிற்போடுவதனை மாத்திரமே செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here