அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஹட்டன் நகரிலும் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட  அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பில் ஒன்று திரண்டு நடத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளதுடன், கண்ணீர்ப்புகைத் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகின்றது.

ஹட்டனில் ஒன்று திரண்ட பொதுமக்கள்

அதேசமயம், ஹட்டன் நகரில் ஒன்று திரண்ட பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வண்ணம் பேரணியாகச் சென்றுள்ளனர்.

இதன்போது பெருமளவிலோனோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here