அரசாங்கத்துக்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் ஆரப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று (8) மற்றும் நாளை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸார் விடுத்தகோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் நேற்று நிராகரிக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க உத்தரவு பிறப்பிக்க மறுத்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, எந்தவொரு குற்றச் செயலையும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக குறிப்பிட்டார் இரு தரப்பு வாதம்.

பொலிஸார் விடுத்த கோரிக்கை: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Request Made Police Judgment Given By The Courtஅரசியல் கட்சிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடி இன்று மற்றும் நானை பாரிய போராட்டத்தை நடத்துவதற்கு தயாராகி வருவதாக பொலிஸ் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகளுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கருத்துச் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் உரிமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தும் பொலிஸாரின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் பொலிஸாரின் கோரிக்கை

பொலிஸார் விடுத்த கோரிக்கை: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Request Made Police Judgment Given By The Court

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 95, 96 மற்றும் 97 இன் படி குற்றச் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட மேலதிக நீதவான் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here