உக்ரைனில் இடம்பெறுகின்ற யுத்தச் செய்திகளை காட்டிலும் இலங்கையின் செய்திகள் இன்று முன்னிலை வகிப்பதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் போர் இன்னும் சர்வதேச தரப்புகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் போர்க்களத்திலிருந்து தூரத்தில் உள்ள இலங்கையில் நெருக்கடி நிலை இன்றைய முக்கிய தலைப்பாக மாறியிருப்பதாக வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருக்கிறது.

பல மாதங்களாக இலங்கை மரணச்சூழலில் சிக்குண்டுள்ளது. அத்துடன் கடன் பளு, தொற்று நோய்களின் அதிகரிப்பு என்பவற்றுடன் உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் அறிவிப்பு! நாட்டின் நிலைமை தொடர்பில் தகவல் | Washindon Post Informationஉணவு பண வீக்கம் ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பின்படி உணவு பண வீக்கம் 57 வீதமாக குறைந்திருக்கிறது. அதிகரித்து வரும் மக்களின் கோபம் காரணமாக அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். எனினும் நெருக்கடி நிலைகள் தொடர்கின்றன.

இந்த நிலையில் பாதுகாப்பு படையினருக்கும், சாதாரண பொதுமக்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் பாடசாலைகள் உட்பட்ட அலுவலகங்கள் குறைந்தது வாரம் முழுவதும் மூடப்படுகின்றன.

சுதந்திர நாடான பின்னர் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கடந்த மே மாதம் தாம் பெற்ற கடனை திருப்பி செலுத்தப் போவதில்லை என்று அறிவித்தது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஓர் இடைக்கால அரசாங்கம் பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனவிடம் இருந்து உதவிக் கோருவதுடன் நாட்டை பிரச்சினையில் இருந்து வெளியேற்ற முயற்சித்து வருகிறது.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் அறிவிப்பு! நாட்டின் நிலைமை தொடர்பில் தகவல் | Washindon Post Information

இறக்குமதிக்கான பணத்தை செலுத்துதல்

எனினும் இறக்குதிகளுக்கு பணத்தை செலுத்தும் பாதை இருண்டதாகவே உள்ளதாக வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருக்கிறது. அவநம்பிக்கையானவர்கள் இந்தியா போன்ற அருகில் உள்ள நாடுகளுக்கு படகு மூலம் தப்பிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தின் அழிவை ஆய்வாளர்கள் 1990களில் பிற்பகுதிகளில் தெற்காசியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நிதிக்குழப்பத்துடன் ஒப்பிடுகின்றனர்.

அத்துடன் தெற்காசியாவின் லெபனானாக மாறும் என்று இலங்கையை பல நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

இதேவேளை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த ஜூன் 20 ஆம் திகதி ஆரம்பித்த பேச்சுவார்த்தைகள் எந்த தீர்மானமும் இன்றி கடந்த வாரம் முடிவடைந்திருப்பதாக வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருக்கிறது.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் அறிவிப்பு! நாட்டின் நிலைமை தொடர்பில் தகவல் | Washindon Post Information

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here