எந்தக் கட்டத்திலும் மக்களின் பக்கத்திற்கு துப்பாக்கியை திருப்ப வேண்டாம் என்று இராணுவத்தினரை கேட்டுக் கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் மீண்டும் தீயை பார்க்க வேண்டி ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 9ஆம் திகதி பெருமளவான மக்கள் வருவார்கள். கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகமாக இருந்தாலும் கூட்டமாக இருக்கும் போது அதனை பயன்படுத்தும் போது மக்கள் ஓடுகையில், மிதிபட்டு மக்கள் இறக்கலாம்.

அதனால் நாடு முழுவதும் மீண்டும் தீயை பார்க்க வேண்டி ஏற்படலாம் என கூறிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here