நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம்  ஆகியவற்றை அதிரிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த  நாணயக் கொள்கை நிலைப்பாட்டை கடுமையாக்குவது அவசியம் என்று கருதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here