நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி அவரின் இல்லத்திற்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) இரவு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இரவு 7.30 மணியளவில் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் 1½ மணிநேரம் பதாதைகளை ஏந்தி கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறுவதைத் தடுக்க, கலகத் தடுப்புப் பிரிவு பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தி சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here