முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை முன்னாள் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்களை கொண்டு வருகின்றது பத்திரிகை கண்ணோட்டம் மகிந்த வெளியிட்ட மறுப்பு

இந்த நிலையில், தாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும், தாம் உடல் நலத்துடன் உள்ளதாகவும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here