லங்கா ஐஓசி நிறுவனம்  எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய எரிபொருள்  நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு | Places To Get Fuel Today

எரிபொருள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களின் பட்டியல் வெளியீடு

லங்கா ஐஓசி நிறுவனம் நேற்றையதினம் (ஜூன் 30)  திருகோணமலை முனையத்தில் இருந்து எரிபொருளை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அந்த எரிபொருள் இருப்புகளைப் பெறும் நிரப்பு நிலையங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடும் சிரமத்தில் மக்கள்

இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என மட்டுப்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சில நகரங்கள் சுயமாகவே முடங்கியுள்ளன. பலரின் தொழிற் துறையும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here