மின்சாரக் கட்டணங்கள் 67 வீதத்தை விடவும் அதிகரிக்கப்படக் கூடாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மின் கட்டண அதிகரிப்பு பரிந்துரையை நடைமுறைப்படுத்தினால் 30 அலகுகளுக்கு உட்பட்ட மின் பாவனையாளர்களின் மாதாந்த மின் கட்டணம் 507 ரூபாவாக உயர்வடையும் எனவும் இது 835 வீத கட்டண அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்தம் 30 முதல் 60 வரையிலான அலகுகளை பயன்படுத்தும் பயனர்களின் மாதாந்த மின் கட்டணத் தொகை 1488 ரூபாவாக உயர்த்தப்படும் எனவும் அது 673 வீத அதிகரிப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு..! வரப்போகும் நடைமுறை தொடர்பில் எச்சரிக்கை 

பொதுமக்களின் யோசனைகள்

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கை | Increase In Electricity Tariffs Sri Lanka

இதன்படி மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகள் கோரப்பட்டுள்ளன.

எனவே பெரும்பான்மையான மின் பயனார்களின் நன்மையை கருத்திற் கொண்டு மின் கட்டணங்கள் 67 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

நுகர்வோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here