எரிபொருள் தாங்கி ஒன்றிற்காக 34 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று (22ஆம் திகதி) முதல் அதனை இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த எரிபொருள் இருப்பு மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை பேணுவதற்கு இந்த எரிபொருள் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலை விடுவிப்பதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் சுமார் 30 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

நாளை கொழும்பு வரும் கப்பல்

இதேவேளை, 40,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றி வரும் சரக்குக் கப்பல் ஒன்று நாளை (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் இன்று உறுதிப்படுத்தினார்.

இதன்படி, கப்பல் வந்தவுடன், சரக்குகள் இறக்கப்பட்டு, தற்போதுள்ள வரிசைகளைக் குறைக்க நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நாட்களாக கடலில் இருந்த கப்பல் விடுவிக்கப்பட்டது - அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here