வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பங்களிப்பு உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் விநியோகத்தில் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பங்களிப்பு உள்ளது. வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்கள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கப்படுகிறார்கள்.
இவ்வாறான போதைப்பொருள் அடிமைகளினால் வடக்கு, கிழக்கு மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். ஆகவே இவ்வாறான சுகாதார சீரு்கேட்டை தடுக்கும் வகையில் ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.