சமையல் எரிவாவை ஏற்றிச் செல்லும் லாஃப் எரிவாயு நிறுவனத்தின் சுமை ஊர்தி ஒன்றை நிறுத்தி, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்தில் லாஃப் எரிவாயு எப்போது மீண்டும் சந்தைக்கு வரும் திகதியை அந்த நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
எனினும் அந்த எரிவாயு நிறுவனத்தின் சுமை ஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட எரிவாயு கொள்கலன்களை பொலிஸார் பெற்றுக்கொள்வது கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் சமையல் எரிவாயு கொள்கலன்களை வைத்துக்கொண்டு மக்கள் நாள் கணக்கில் வரிசைகளில் நிற்கும் சூழ்நிலையில், பொலிஸாரின் இப்படியான செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் பொலிஸார் மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.