பேராதனை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

அதன்படி பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்! விடுதிகளில் இருந்து உடன் வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிப்பு

நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் விடுதிகள்

அத்துடன், மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்! விடுதிகளில் இருந்து உடன் வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிப்பு

இதன் காரணமாக விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் விடுதிகளை விட்டு உடனடியாக வெளியேறி வீடுகளுக்கு செல்லுமாறு பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here