எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நாட்களாக வரிசையில் நிற்கும் மக்களுக்கு செலுத்தும் பணத்திற்கேற்ப எரிபொருள் கிடைப்பதில்லை என தெரியவந்துள்ளது.

ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 மில்லி லீட்டருக்கு மேல் பெறுவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றர் முதல் 5 லீற்றர் வரை எரிபொருள் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 100 – 150 மில்லி லீற்றர் குறைவாகவே கிடைக்கின்றது.

எரிபொருள் நிலையங்களில் நடக்கும் மோசடி

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடக்கும் பாரிய மோசடிகள் அம்பலம்

பம்பின் மின்சுற்று வரிசைப்படுத்தல் காட்சிப்படுத்தும் திரையில் 5 லீற்றர் என காட்டுகின்ற போதிலும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவிலேயே கிடைப்பதாக தெரியவந்துள்ளதென கூட்டுதாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை கடந்த கொரோனா காலத்தில் இருந்தே காணப்படுகின்றது. இது தொடர்பில் பரிசோதிப்பதற்கு எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளரின் கீழ் நிர்வாக பதவியொன்றும் நிறுவப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக எடை, அளவீடுகள் மற்றும் அதன் அவசர சோதனை பிரிவு அதிகாரிகளும் இதற்கான பயணியில் உள்ளனர்.

கொரோனா காலத்தில் ஆரம்பம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடக்கும் பாரிய மோசடிகள் அம்பலம்

எனினும் கொரோனா காலத்தில் நோய் பரவும் அச்சம் காரணமாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் நிரப்பு நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளதால், நிரப்பு நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்படவில்லை.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எழுபத்தைந்து வீதமானவை இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெற்றதா என்பதை கண்டறிவதே நிர்வாகிகளின் கடமை என தெரிவிக்கப்படுகிறது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here