நிபந்தனையை தளரத்துங்கள்

சீனாவுடனான 1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இல்லாதுபோனால், அதைப் பயன்படுத்த முடியாது.

இந்தநிலையில், இலங்கைக்கு தேவையான அளவு வெளிநாட்டு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீனாவிடம் கடன் நிபந்தனையை மாற்றும் இலங்கை!

சீனாவுக்கே நன்மை

இதனையடுத்து, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாணய வசதியை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட ஷரத்தை திருத்துமாறு இலங்கை அதிகாரிகள் தற்போது சீன தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சரத்தின் திருத்தமானது சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் என்பதால், அது சீனாவுக்குப் பயனளிக்கும் என்று இலங்கைத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

]

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here