எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருப்போருக்கு பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர் அதன்படி எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

எரிபொருளை பெற்றுத் தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு அவசர அறிவுறுத்தல்

எனவே, இவ்வாறான மோசடிக்காரர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை இவ்வாறானவர்கள் குறித்த தகவல்கள் அறிந்திருப்பின் தமக்கு அறியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகரகமவில் பதிவாகியுள்ள சம்பவம் இவ்வாறானதொரு மோசடி சம்பவமொன்று மகரகம பகுதியில் பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு அவசர அறிவுறுத்தல்

குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here