நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல் முதல் முன்னெடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்கள் சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எரிவாயுவுடன் நாட்டிற்கு வந்துள்ள கப்பல்

அத்துடன், 3950 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

இதன்படி, தர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு குறித்த எரிபொருள் தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் இன்று முதல் எரிவாயு கொள்கலன் விநியோகம்

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நாளாந்தம் 50000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம்

இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ள எரிவாயு சிலிண்டர்களில் 60 வீதமானவை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாடெங்கும் இன்று முதல் எரிவாயு கொள்கலன் விநியோகம்இதனிடையே, வார இறுதியில் 2500 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது எனவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here