காலிமுகத்திடல் போராட்டம் பொதுவான இலக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அரசியல் போதமின்றிய நிலைமை இல்லாது போயுள்ளன என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியல் தரப்புக்கள் அதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இது துரதிஷ்டமான நிலைமையாகும். ஆகவே அவர்கள் தங்களின் இலக்கை அடைவதற்கு மீண்டும் பேதங்களின்றி ஒன்றிணைவதே ஒரே தெரிவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் திடீர் முடிவு! சீர்குலைக்கப்பட்ட முன்மொழிவு

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் திடீர் முடிவால் சீர்குலைக்கப்பட்ட முன்மொழிவு

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை என்ற எமது கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதோடு தேசிய நிறைவேற்று சபை ஒன்றின் ஊடாக பிரதமர், அமைச்சரவை நியமித்து இடைக்கால ஆட்சியை முன்னெடுச் செல்வதே எமது முன்மொழிவாக இருந்தது. அதற்கான உரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அவ்விதமான நிலைமையில் தான் ரணில் விக்ரமசிங்க  திடீரென பதவியைப் பெற்றுக்கொண்டு அதனைத்தையும் சீர்குலைத்துவிட்டார்.

ரணிலின் திடீர் முடிவு! சீர்குலைக்கப்பட்ட முன்மொழிவு

எதிராக செயற்பட்டவர்கள் மீது நடவடிக்கை

அதன்பின்னர் நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு நாம் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக தீர்மானித்தோம்.

அந்த தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு பங்காளிகளாக இருந்தவர்களே அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகவே, அவர்களுக்கு எதிராக கட்சி நிச்சயமாக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. அடுத்த மத்திய குழுக்கூட்டத்தில் அதுபற்றிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதால் எவ்விதமான பிளவுகளும் ஏற்படாது. கட்சி மேலும் வலுவடையும்.

ரணிலின் திடீர் முடிவு! சீர்குலைக்கப்பட்ட முன்மொழிவு

சஜித்தின் தாமதம்! பதவியில் ரணில்

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும், எமது தலைமைக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன. அதனடிப்படையில் 11கட்சிகள் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கத்துக்கான வரைவைத் தயாரித்து முன்மொழிந்தோம்.

அத்துடன் ஐ.ம.ச, ஜே.வி.பி., கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்களுடனும் கலந்துரையாடி இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு முயற்சித்திருந்தோம்.

துரதிஷ்டவசமாக சஜித் பிரேமதாச முடிவினை அறிவிக்கும் விடயத்தில் ஏற்படுத்திய தாமதத்தினால் நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. ரணில் விக்ரமசிங்க பதவியில் அமர்ந்து விட்டார்.

ரணிலின் திடீர் முடிவு! சீர்குலைக்கப்பட்ட முன்மொழிவு

நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பு யார்?

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் முதல்நபராக காணப்படுபவர் ஜனாதிபதி கோட்டாபயவே. 681பில்லியன் ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்படுவதற்கு அவர் வரிகள் தொடர்பில் எடுத்த தீர்மானமே காரணமாகின்றது.

அதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கான உரவிவகாரம் உள்ளது. ஆகவே தான் பொதுமக்கள் ‘கோட்டா கோ கோம்’ என்று வலியுறுத்துகின்றார்கள். எனவே ஜனாதிபதி கோட்டாபய நிலைமைகளை உணர்ந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் திடீர் முடிவு! சீர்குலைக்கப்பட்ட முன்மொழிவு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here