தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
போலி ஆவணங்களை தயாரித்து, தவறான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.