இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் நீர்கொழும்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் நேற்றுக் காலை நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மற்றுமொரு சந்தேகநபர் நீர்கொழும்பு பஸ் தரிப்பிட பகுதியில் நேற்றுப் பிற்பகல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த இரண்டு சந்தேகநபர்களிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒருவரை நீர்கொழும்பு – ரமணி மாவத்தையில் வைத்து நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் நீர்கொழும்பு மற்றும் மருதானைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் மூவர் கைது

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here