பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.

முன்னதாக நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் சார்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் ரணில் பதவியேற்றுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை காணப்படும் நிலையிலேயே இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here