இலங்கையின் பணவீக்கம் கடந்த 42 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளது.

இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு தழுவிய பணவீக்கம் கடந்த மாதம் (ஏப்ரல் 2022) அதன் அதிகபட்ச உச்சமான 33.80 சதவீதத்தை எட்டியுள்ளது.

இதற்கு முன்னர் பணவீக்க வரலாற்றில் பதிவு 1980ஆம் ஆண்டு 32.50 சதவீதமாக அமைந்திருந்தது.

1980 ஆம் ஆண்டு பல பில்லியன் ரூபாய்கள் முடுக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம் காரணமாகவே பணவீக்கம் அதிகரித்தது.

நான்கு தசாப்தங்களில் முதன்முறையாக! இலங்கையின் வரலாற்றில் பதிவான அதியுயர் பணவீக்கம்இந்தநிலையில் தற்போதைய பணவீக்கம், அதிகரித்த உணவுப் பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ளது.

இது கடந்த ஏப்ரல் முதல் ஏழு மாதங்களுக்கு இரசாயன உரங்களைத் தடை செய்த அரசாங்கக் கொள்கையால் ஏற்பட்டதாகும். இதற்கிடையில், உணவு அல்லாத பணவீக்கமும் கிட்டத்தட்ட 14 ஆண்டு வரலாற்றுப்பதிவை முறியடித்துள்ளது.

கடந்த மாதம் இந்த பணவீக்கம் 23.9 சதவீதமாக அதிகரித்தது.  2008 நவம்பரில் இது 16.8 சதவீதமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நான்கு தசாப்தங்களில் முதன்முறையாக! இலங்கையின் வரலாற்றில் பதிவான அதியுயர் பணவீக்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here