இலங்கையில் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்கப்படுத்தப்படவுள்ளது.

நிறுவனத் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று முதல் பொதுத்துறை பணியாளர்கள் பணிபுரிய அழைக்கப்படுவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிபொருள் நெருக்கடியை நிர்வகிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here