கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் 04 பேர் உள்ளிட்ட பதினைந்து சிறைக் கைதிகள் இம்முறை தோற்றியுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் ஒரு கைதியும், மகசீன் சிறைச்சாலையில் நான்கு புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும், வட்டரெக்க திறந்த சிறைச்சாலையில் 10 சிறுவர் குற்றவாளிகளும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
வட்டரக்க மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கைதிகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றையதினம் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 3844 பரீட்சை நிலையங்களில் 517496 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.