இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பிறந்து இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.
உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.