நாட்டில் கடந்த சில நாட்களுக்க முன்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்குத் தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சம்பவம் தொடர்பில் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த  அறிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here