கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தொடராலாம், ஆனால் ஆர்ப்பாட்டக் காரர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க  விருப்பம் வெளியிட்டுள்ளார் எனவும் ஹரின்  தெரிவித்துள்ளார்.

கோட்டா கோ கோம் தொடரலாம் ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் அதன் மூலம் அவர்களையும் இணைத்து தீர்வை காணமுடியும்.

நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் இரு ஆர்ப்பாட்டக்காரர்களை இணைத்துகொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப முயல்கின்றோம் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நாடாளுமன்ற குழுவில் இணைவதன் மூலம் அவர்கள் இறுதியில் புதிய கட்சியை உருவாக்கலாம் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்பு! நிபந்தனைகளும் விதிப்புகோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்பு! நிபந்தனைகளும் விதிப்பு

கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்பு! நிபந்தனைகளும் விதிப்பு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here