எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பிலான அறிவிப்பொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொள்கை ரீதியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக எரிபொருள் விநியோகிக்கும் பவுஸர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விநியோக இடைநிறுத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்: அரசாங்கம் அறிவிப்பு

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here